டிடி நடித்த காதல் பாடலைப் பார்த்த ஆர்யா, ட்விட்டரில் அவரைப் பாராட்டியுள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதலர் தினத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் பாடல் ‘உலவிரவு’. மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் டிடி இருவரும் இந்தப் பாடலில் நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக், இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பாடலைப் பார்த்த ஆர்யா, “வாவ்... வாட் எ ரொமான்ஸ்... பின்ற. லவ்லி சாங்” என ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள டிடி, “தேங்க் யூ ஸோ மச். சார் நீங்க ரொமான்ஸ் பத்தி பாராட்டுறது ரொம்ப சந்தோஷம்” எனத் தெரிவித்துள்ளார்.