படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். இதுவரை இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப் படாமல் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி இயக்குனர் ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த டீசரோடு படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்துக்கு வேட்டைக் கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. தற்போது கருப்பு என்று மட்டும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.