ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் டெடி! – ட்ரெய்லர் வெளியீடு!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:07 IST)
ஆர்யா நடித்து நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள டெடி பட ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் டெடி. டெடி என்னும் உயிருள்ள கரடி பொம்மை முக்கிய கதாபாத்திரம் வகிக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ள நிலையில், வில்லன் கதாப்பாத்திரத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம் கொரோனா காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஓடிடிக்கு விற்கப்பட்ட படங்களில் டெடியும் இணைந்துள்ளது. இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் மார்ச் 17ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்