ஆர்யாவின் ‘கேப்டன்’ சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!
திங்கள், 25 ஜூலை 2022 (19:00 IST)
பிரபல நடிகர் ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பதும் இதனை அடுத்து படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேப்டன் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு உரிமையையும் ஜீ தமிழ் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
செப்டம்பர் 8-ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார் என்பதும் சக்தி சௌந்தர்ராஜன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடங்களில் காவ்யா ஷெட்டி மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது