மாபெரும் வெற்றி: தடம் வெற்றியில் தத்தளிக்கும் அருண்விஜய்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (09:08 IST)
தடம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
 
வித்தியாசமான கதையாம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருப்பவர் நடிகர் அருண்விஜய். 
 
இந்நிலையில் அருண்விஜய், மகிழ்திருமேனி கூட்டணியில் வெளியாகியிருக்கும்  `தடம்' க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இப்படம் கடந்த 1ந் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தற்போது வரை தமிழகத்தில் 10 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு நேற்று தூத்துக்குடி சென்றது. இயக்குனர் மகிழ்திருமேணி, அருண் விஜய் ஆகியோர் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் தடம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு சென்றனர். அங்கு அலைமோதிய ரசிகர்கூட்டங்களுக்கு நடுவே அருண்விஜய் பேசினார். தடம் படம் மேலும் வெற்றியடைய ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்