அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும் அருண் விஜய் ! – மீண்டும் காக்கிச்சட்டை !

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (13:29 IST)
நடிகர் அருண் விஜய் சாஹோ படத்துக்குப் பிறகு பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் அருண் விஜய் சமீபகாலமாக பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அவரது தடம் வெற்றியடைந்ததை அடுத்து. கடந்த மாத இறுதியில் வெளியான சாஹோ படமும் வசூல் மழைப் பொழிந்து வருகிறது.

இதையடுத்து அவர் மாஃபியா மற்றும் பாக்ஸர் ஆகிய படங்களை முடித்துள்ள நிலையில் அவர் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஹரிதாஸ் ஆகியப் படங்களை இயக்கிய ஜி என் ஆர் குமரவேலன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்