நீங்க பண்ணுங்க ஜி... லாக்டவுனில் தீவிரமாக இறங்கிய அருண் விஜய்!

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (17:24 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில்  உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அருண் விஜய் அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்துள்ளதை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். சாலையில் செல்லாமல் வீட்டின் அருகே இந்த ஒர்க்அவுட்டை செய்துள்ள அவர் கொரோனா நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#40kms #cardio #cycling

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்