படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் சம்பளம்… தமிழ் முன்னணி நடிகர்களை விமர்சித்த அருண் பாண்டியன்!

சனி, 16 ஏப்ரல் 2022 (09:58 IST)
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கண்டனக் குரல்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி ஆகியோரின் சம்பளம் தற்போது 100 கோடி ரூபாய் வரை சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதுபற்றி அவ்வப்போது விமர்சனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இந்த விஷயம் பற்றி தற்போது பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘முன்னணி நடிகர்களின் சம்பளமே படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் வரை வந்துவிடுகிறது. இதனால் படத்தின் தரம் குறைந்து விடுகிறது” என சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்