சினிமாக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மத்திய அரசு

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (18:35 IST)
எங்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்று சினிமாக்காரர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



நாடு முழுவதும் விரைவில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில், சினிமாவுக்கு 28 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தங்களுக்கு சுமையாக இருக்கும் என சினிமாக்காரர்கள் கருத்து தெரிவித்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த கமல், “மத்திய அரசு இந்த வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லி, “மீடியாக்கள் மூலம் மத்திய அரசுக்கு சினிமாக்காரர்கள் அழுத்தம் கொடுக்காதீர்கள். அது வேலைக்கு ஆகாது. உங்கள் கையைப் பிடித்து நாங்கள் முறுக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி ஆவரேஜ் எண்டெர்டெயின்மெண்ட் டாக்ஸ் 29.1 சதவீதமாக உள்ளது. ஆனால், ஜிஎஸ்டியில் 28 சதவீதம் தான். உண்மையில் ஜிஎஸ்டியால் உங்களுக்கு நன்மைதான்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்