விடாமுயற்சி படக்குழுவோடு இணைந்த அர்ஜுன்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:37 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது அஜித்தும் அர்ஜுனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்வும் உள்ளார். அவரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனி அங்கு இப்போது முக்கியமானக் காட்சிகளை இவர்களை வைத்து படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்