ஹாட்ஸ்டாரில் அர்ஜூன் நடித்த ‘கில்லாடி’!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:42 IST)
ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த தெலுங்கு திரைப்படமான கில்லாடி என்ற படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரவி தேஜா நாயகனாகவும் மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும் நடித்த கில்லாடி திரைப்படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு சில நாட்களில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் இதற்காக மிகப் பெரிய விலை கொடுத்து ஹாட்ஸ்டார் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும், ரமேஷ் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்