அர்ஜுன் தாஸ், துஷாரா நடித்துள்ள ‘அநீதி’ படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:26 IST)
இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய வெயில், அங்காடித் தெரு மற்றும் அரவாண் ஆகிய திரைப்படங்களுக்காக கவனம் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஜெயில் திரைப்படம் சரியாக போகாத நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா ஆகியோர் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை அவரே தயாரித்துள்ள நிலையில் இயக்குனர் ஷங்கர் வெளியிடுகிறார். ஜூலை 21 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

எப்படி இருக்கு டிரைலர்?

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது டிரைலர். கோபக்கார இளைஞன் ஒருவனின் ஆவேசத்தை காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் படம் தீவிரத்தன்மையோடு சீரியஸான ஒரு கதைக்களமாக இருக்கும் என்பது தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்