அரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- அதிர்ச்சியில் சின்னத்திரை!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:23 IST)
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரண்மனைக் கிளி சீரியல் நாயகி மோனிஷா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. அரசு வழிகாட்டுதல்களின் படி பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அரண்மனைக் கிளி என்ற சீரியலில் நடித்துவரும் மோனிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாராம். இதனால் அந்த சீரியலில் அவருடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் பயத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்