நான் பலிகடா ஆகிவிட்டேன்: இசை நிகழ்ச்சி சொதப்பல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (15:14 IST)
சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அனைவரும் ஏஆர் ரகுமானை குற்றம் சாட்டி வரும் நிலையில் நான் பலிகடாகி விட்டேன் என்று ஏஆர் ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு நாளை பொறுப்பேற்க்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம்  மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 
 
மேலும் மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இன்று நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு இசையமைப்பாளராக எனது வேலை சிறந்த இசை நிகழ்ச்சியை கொடுப்பது மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். 
 
மழை மற்றும் பெய்து விடக்கூடாது பிற விஷயங்களை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற யோசனையில் வெளியில் நடப்பது கொடுத்து தெரியாமல்  மகிழ்ச்சியாக பெர்பார்மன்ஸ் செய்து கொண்டிருந்தேன்’ என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்