செப்டம்பர் 17 வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:21 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடத்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
மேலும் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்