ஏ.ஆர்.ரஹ்மானின் வைரல் ஆகப் போகும் இசை - பார்த்திபன்

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (15:38 IST)
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் நிழல் என்ற படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

 உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் பார்த்திபன் இன்று வெள்யிட்டுள்ளார். அதில்,

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். அதில், இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்