விநாயகர் சதூர்த்தி தினத்தில் சன் டிவியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்!

செவ்வாய், 20 ஜூலை 2021 (20:40 IST)
விநாயகர் சதுர்த்தி தினத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் சன் டிவியில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திரையரங்குகள் தற்போது திறக்காத காரணத்தால் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
 
இதனை அடுத்து சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இதனால் வரும் விநாயகர் சதுர்த்தியில் இந்த படம் சன் டிவியில் துக்ளக் தர்பார் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அதன் பின்னர் சன் நெக்ஸ்ட் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ள இந்த திரைப்படத்தை கோவிந்து வசந்தா இசையமைத்து உள்ளார் என்பதும் தீனதயாள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்