பிக்பாஸ் ரித்விகாவுடன் கைதியாக அரவிந்த் சாமி!

செவ்வாய், 20 ஜூலை 2021 (20:14 IST)
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். 
 
இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். இதில் அரவிந்த்சுவாமி நடித்துள்ள அறிவியல் புனைகதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 
 
இந்நிலையில் பிக்பாஸ் ரித்விகா நடிகர் அரவிந்த் சாமியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரித்விகா போலீஸ் கெட்டப்பில் இருக்க அரவிந்த் சாமி கைதி லுக்கில் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்