'பாகுபலி'க்கு சவால் விடுக்கும் 'பாகிமதி' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (18:57 IST)
அனுஷ்கா நடித்த படங்களிலேயே சிறந்த படமாக 'பாகுபலி மற்றும் பாகுபலி 2' படங்களை கூறலாம். அந்த அளவுக்கு இரண்டு படங்களிலும் அவருடைய கேரக்டர் செதுக்கப்பட்டிருந்தது


 


இந்த நிலையில் தற்போது 'பாகிமதி' என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். நாளை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சவால் விடுக்கும் வகையில் இந்த 'பாகிமதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

ஸ்டுடியோக்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்ன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கி வரும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்