கான்ஸ் திரைப்பட விழாவில் அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:40 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொகபத்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அவரின் ஆரம்பகால படங்கள் பெற்ற வரவேற்பை இப்போதுள்ள படங்கள் பெறுவதில்லை. ஆனாலும் அவை வெளிநாட்டு சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள கென்னடி என்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கிரீனிங் என்ற பிரிவில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் கேங்ஸ் ஆஃப் வாசேபூர், பாம்பே டாக்கீஸ் மற்றும் ராமன் ராகவ் 2.0 ஆகிய படங்களும் கேன்ஸில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்