ரஜினி – நயன்தாரா காதல் மழையில்..! சாரக்காற்றே..! – அண்ணாத்த இரண்டாவது பாடல் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:24 IST)
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய ஓப்பனிங் சாங் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைத்து பாடியுள்ள சாரக்காற்றே என்ற பாடல் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்