நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளும் அண்ணாத்த!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:10 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் இப்போது எதிர்மறை விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ரஜினி படத்துக்கு இருக்கும் வரவேற்பை விட கொஞ்சம் கம்மியாகவே இந்த படத்துக்கு இருந்தது. இந்நிலையில் காலைக் காட்சிக்கு முழுவதும் ரஜினி ரசிகர்களாக வந்ததால் அவர்கள் படத்தை ஆகோ ஓகோ எனப் புகழ்ந்து தள்ளினர். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் படம் மரண மொக்கை என விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்