ஜெய்க்கு ஜோடியான அஞ்சு குரியன்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (20:26 IST)
மலையாள நடிகையான அஞ்சு குரியன், ஜெய்க்கு ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார்.


 

 
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில், நிவின் பாலியின் தங்கையாக நடித்தவர் அஞ்சு குரியன். சில மலையாளப் படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில், ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.
 
‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வத்திடம் உதவியாளராக இருந்த ராஜேஷ், இந்தப் படத்தை இயக்குகிறார். திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில், சி.வி.குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அடுத்த கட்டுரையில்