கொரட்டாலா சிவா அடுத்த படத்திற்கு அனிருத் இசை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வெள்ளி, 20 மே 2022 (08:59 IST)
ரஜினி, கமல்,அஜித், விஜய் என தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தற்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக மாறி வருகிறார் 
 
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார் 
 
ஏற்கனவே அணிருத் பவன் கல்யாண், நானி ஆகியோர்களின் படங்களுக்கு தெலுங்கில் இசையமைத்து வரும் அனிருத், தற்போது ஜூனியர் என்டிஆரின் படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை அடுத்து இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரட்டாலா  சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த ஆச்சாரியா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ஜூனியர் என்டிஆர் உடன் இணையும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்