முதலில் மலர் கண்காட்சி; அடுத்து கோடை விழா - ஊட்டி & கொடைக்கானலில் கொண்டாட்டம்!

வெள்ளி, 20 மே 2022 (08:19 IST)
2 ஆண்டுகளுக்கு பிறகு உதகையில் 124வது மலர் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.  

 
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் உதகையும் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல் மற்றும் உதகையை நோக்கி பயணித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் உதகையில் 124வது மலர் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.  2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
 
இதனால் இன்று 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி பணி நாளாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலா பயணிகள் பலரும் கொடைக்கானல் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா மே 24 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
 
கோடை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்