இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த சூதாடி இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக இட்லி கடையில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.
இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு,எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்