இன்று மாலை மாஸ்டர் படத்தின் ஒரு முக்கிய புரோமோ ரிலீஸாகவுள்ளதாக இப்படத்தின்ன் வசனகர்த்தா ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மாலை மாஸ்டர் படத்தின் ஒரு முக்கிய புரோமோ ரிலீஸாகவுள்லதாக இப்படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : எனது ஃபேவரைட் புரொமோ இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாகவுள்ளது. அதில் இசையமைப்பாளர் அனிருத்தின் அட்டூழியம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று மாஸ்டர் படத்தின் 1 மணிநேரக் காட்சிகள் லீக் ஆனநிலையில் இன்று தமிழ் சினிமா துறையினர் ஒன்று சேர்ந்து மாஸ்டர் படத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள படத்திற்கு மேலும் எதிர்ப்பார்புள் அதிகரித்துள்ள போதிலும் நெட்டிசன்ஸ் படத்தின் புரோமோவில் ஒரு பகுதிதான் நேற்றைய மாஸ்டர் லீக் என கூறிவருகின்றனர்.
ஆகமொத்தம் இன்று மாலை அனிருத்தின் மியூசிக்கில் ஒரு அட்டூழியம் ( வெகு சிறப்பான ஒன்று ) நடக்கவுள்ளதாக விஜய் ரசிகர்ள் குஷியாகி வருகின்றனர்.
My favorite promo coming up today evening at 5pm. Get ready for Goosebumps. An @anirudhofficial அட்டூழியம் Loading