மரண மாஸ் காட்டும் "பேட்ட"! - அனிருத்தின் மேக்கிங் வீடியோ! - செம்ம குத்து!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (13:08 IST)
"பேட்ட"  படத்திற்காக பாடல் கம்போஸ் செய்யும் மேக்கிங் வீடியோ ஒன்றை அனிருத் வெளியிட்டுள்ளார்.  
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் "பேட்ட" படத்தின் "மரண மாஸ்" சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
மரண மாஸ் ஆரம்பிப்பதற்கு இன்னும் 5 மணி நேரமே உள்ள நிலையில் இதனின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
 
இதைப் பார்க்கும்போது அனிருத் மிகச்சிறந்த ஒரு குத்தாட்ட பாடலை உருவாக்கி உள்ளார் என தோன்றுகிறது. இது ரஜினி ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணமாக உள்ளது. வளர்ந்து வரும் தமிழ் சினிமாவின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அனிருத் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த மேக்கிங் வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்