ஓரங்கட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த அனிருத்!!!

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (18:58 IST)
தம்மை ஓரங்கட்டிய இயக்குனருக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் இடையமைப்பாளர் அனிருத்.
தமிழில் முன்னணி இடையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அனிருத் தெலுங்கில் பவன் கல்யாண் படம் ஒன்றிற்கு இசையமைத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
 
இதனால் அந்த படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை புக் செய்தார்.
 
இந்நிலையில் தற்போது அனிருத் இசையில் தெலுங்கில் வெளியாகியிருக்கும் ஜெர்ஸி படம் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.
 
இதையடுத்து தம்மை ஓரங்கட்டிய அந்த இயக்குனருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அனிருத் டிவிட்டரில் பேட்ட பட டைலாக்கை(வீழ்வேன் என நினைத்தாயோ)  பதிவிட்டுள்ளார். தனது வெற்றியின் மூலம் அனிருத் அந்த இயக்குனரை பழிவாங்கிவிட்டார் என ரசிகர்கள் அனிருத்தை பாராட்டி வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்