ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்கமறு படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த 3 படங்களை இயக்க செல்வராகவன், ஹரி மற்றும் அகமது ஆகிய இயக்குனர்கள் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவி தரப்பில் இருந்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்போதைக்கு ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் கோமாளி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவரோடு காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.