ஆண்ட்ரியா நிச்சயம் தேசிய விருது வாங்குவார் - அடிச்சு சொன்ன மிஷ்கின்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (14:43 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. 
 
இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் படத்தை குறித்து ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடிய இயக்குனர் மிஷ்கின், ஆண்ட்ரியா இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகவும் நிச்சயம் இந்த ஆண்டு அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்குவார் என்றும் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமான நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆண்ட்ரியாவை அப்படி நடிக்க வைத்து மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக இயக்குனர் மிஷ்கின் அவரிடம் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்