பிசாசு 2 படத்தில் மிஷ்கினின் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

வெள்ளி, 18 ஜூன் 2021 (15:22 IST)
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படமாக்கி விட்டாராம். இன்னும் கிளைமேக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவில்லையாம். இதையடுத்து எடுத்த காட்சிகளை எல்லாம் எடிட் செய்த மிஷ்கின் அதை தயாரிப்பாளருக்கு போட்டுக்காட்டியுள்ளாராம். வழக்கமாக மிஷ்கின் படத்தை முழுவதும் எடிட் செய்வதற்கு முன்னர் தயாரிப்பாளருக்குக் காட்ட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்