அமிதாப் பச்சனை பின்னுக்கு தள்ளிய தளபதி விஜய்..! மாஸ் கிளப்பிய சர்க்கார்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (15:19 IST)
மாபெரும் வெற்றி படங்களான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிவரும் சர்கார் திரைப்படத்தில்  நடிகர் விஜய் ஒரு சர்வதேச தொழில் அதிபராக நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
நடிகை  கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இதன் டீசர் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்நிலையில் தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாவே படத்தை  ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் படத்தின்  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. 
 
இந்நிலையில் ஐஎம்டிபி -வின் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களின் வரிசையில், விஜய்யின் சர்கார் முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 55.1 சதவீதம் ரசிகர்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக  அந்த கணக்கெடுப்பு மிகவும் துரிதமாக தெரிவிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்