அமீர்கானுக்கு கொரோனாவா? அவரே அளித்த விளக்கம்

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (12:37 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்கான் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பரிசோதனை செய்ததாகவும் அதில் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து அமீர்கான் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்
 
என்னுடைய அலுவலக ஊழியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் தனது தாயாருக்கு மட்டும் இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வர வேண்டும் என்று தான் இறைவனை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
தன்னுடைய ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தெரிந்ததும் உடனடியாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க உதவி செய்து கொண்டிருக்கும் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
சுகாதாரத் துறையினர் மற்றும் கார்ப்பரேஷன் அதிகாரிகளின் தீவிர சிகிச்சையால் தனது ஊழியர்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். தனக்கும் தன்னுடைய மற்ற ஊழியர்களும் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்வதாக அமீர்கான் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்