கே ஜி எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் அமீர்கான்?

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (15:33 IST)
நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா படத்துக்கு பிறகு சினிமாவுக்கு ஒரு ப்ரேக் விடுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அடுத்து சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க அமீர்கான் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லையாம். மேலும் அவர் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி கூறிய அவர் “நான் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனது அம்மா மற்றும் மகளுடன் நான் நேரம் செலவிடவே இல்லை. அதனால் இப்போது ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதனால் அமீர்கானின் அடுத்த படம் இப்போதைக்கு இல்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் அமீர் கானை முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்