எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கும் அமீர்

திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (11:41 IST)
எம்.ஜி.ஆர். பாண்டியன்’ படத்தில், எம்.ஜி.ஆரின் ரசிகனாக நடிக்கிறார் இயக்குநர் அமீர்.




ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அமீர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். அதனால், தன் பெயரான பாண்டியனுடன் எம்.ஜி.ஆரை சேர்த்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என அழைக்கப்படுகிறார். அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ஆனந்த்ராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இதுவரை 6 ஷெட்யூல் முடிந்துவிட்டது. தற்போது ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்துக் கொண்டிருப்பதால், இந்தப் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. ‘வடசென்னை’ முடிந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தேனியில் நடைபெறும். ஆர்யா, அவர் தம்பி சத்யா நடிப்பில் ‘சந்தனத்தேவன்’ படத்தை இயக்கி வருகிறார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்