113 எம்.எல்.ஏ.க்களுடன் தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி; பலம் பெறும் தினகரன்

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (16:40 IST)
டிடிவி தினகரன் அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததை அடுத்து 113 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மை இழந்து தவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.


 

 
ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததை தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் தினகரன் ஆட்சி கலைந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது என போராடி வருகிறார். தற்போது தினகரன் அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் இணைந்துள்ளனர்.  
 
தொடர்ந்து தினகரன் அணியில் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க ஆலோசித்து வருகின்றனர். மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர்.
 
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். நாளை சட்டசபை கூட வாய்ப்புள்ளது. திமுக செயல் தலைவர் ஒருபக்கம் தீயாக வேலை செய்து வருகிறார்.
 
தற்போது ஆட்சி கலைந்தாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அது திமுக கட்சிக்கு ஆதரவாக அமைய அதிக அளவில் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்