த்ரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் த்ரிஷா!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:48 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து புஷ்பா 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் படத்தை த்ரிவிக்ரம் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்