7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (17:01 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் நா பேரு சூர்யா என்ற படம் ஒரே நேரத்தில் எழு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப்படம் தேச பக்தி கதையில் உருவாகியுள்ளது.
 
நடிகர் அல்லு அர்ஜூன் டோலிவுட்டில் பிரபலமான நடிகர். தற்போது இவர் நடித்து வரும் படம் நா பேரு சூர்யா. இந்தப் படத்தில் அர்ஜூன், சரத்குமார், அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 
 
இந்த படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்பூரி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 7 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்