’சூடான தீ’.. ‘புஷ்பா 2’ பாடலை ரிலீஸ் செய்த ராஷ்மிகா மந்தனா..!

Siva
புதன், 29 மே 2024 (12:03 IST)
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது 
 
இந்த பாடல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழில் சூடான தீ என்ற பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை சுகுமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்