அக்ஷரா ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (13:38 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாஸன் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் அஜித் நடித்த விவேகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அக்ஷரா ஹாசன் அதன்பின்னர் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 

தற்போது அவர் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டும் அல்லாது ஹிந்தியிலும் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு தந்தை கமல் ஹாசன் மற்றும் அக்கா ஸ்ருதி ஹாசன் சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி வாழ்த்திய புகைப்படங்களை ஸ்ருதி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்