ப்ளீஸ் அந்த படத்தை ரிலீஸ் பண்ணாதீங்க - தயாரிப்பாளரிடம் கெஞ்சிய டாக்டர் ஹீரோயின்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (13:21 IST)
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர்.  இந்த திரைப்படம் வெளியான மூன்றே நாளில் ரூ.25 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் பார்வையில் பிரியங்கா மோகன் விழுந்துள்ளார். நிச்சயம் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவரை தேடி வரும் இந்நிலையில் பிரியங்கா நடித்த முதல் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாம். இந்த தகவலை அறிந்த அவர் பதறிப்போய் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து தயவு செய்து அந்த படத்தை மட்டும் ரிலீஸ் பண்ணாதீங்க என கேட்டுள்ளார். ஆனால், இதை தயாரிப்பாளர் கேட்பாரா என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்