ரஜினியோடு மோதி அஜித் ஜெயிச்சுட்டார் - விஸ்வாசம் தயாரிப்பாளர்..!

சனி, 12 ஜனவரி 2019 (19:12 IST)
ரஜினியுடன் மோதி அஜித் ஜெயிச்சுட்டார் என்று விஸ்வாசம் படத்தின் தாயரிப்பாளர் மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார். 


 
பொங்கல்  விருந்தாக ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்பபடமும் கடந்த வியாழனன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியடைய வைத்துள்ளது.  இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொள்வதால் அவரவர்களின் ரசிகர்கள் தங்கள் தலைவர்களின் படங்களை  தூக்கிவைத்து கொண்டாடினார்கள். 
 
21 ஆண்டுகளுக்கு முன்னர்  1997ம் ஆண்டு ரஜினி நடித்த அருணாச்சலம் படமும் அஜித் நடித்த ராசி படமும் ஒரே நேரத்தில் வெளியாகி இரு படங்களும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரே நேரத்தில் பேட்ட , விஸ்வாசம் வெளிவந்தது. இதனை இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாடி தீர்த்துவருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேட்ட- விஸ்வாசம் மோதல் குறித்து கூறியதாவது ,
 
"தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால் சினிமா ஸ்டிரைக்கால் அது தள்ளிப்போனது. அதனையடுத்து ஆகஸ்ட் மாதமே பொங்கல் ரிலீஸ் என அறிவித்து இருந்தோம். திடீரென சன் பிக்சர்ஸ் பேட்ட பொங்கல் ரிலீஸ் என கூறியது அதிர்ச்சியாக தான் இருந்தது. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். ஆனால், அவர்கள் பொங்கல் விடுமுறை என்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என கூறி விட்டனர்.
 
ரஜினியை வைத்து 6 படம் தயாரித்து விட்டதால் இந்த மோதல் கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது ரஜினியுடன் மோதி அஜித் வென்றுவிட்டார். படத்திற்க்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது" என்று கூறிய அவர் ,  அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்