ரஜினியின் ஸ்டைலாலும் , தனித்துவமான நடிப்பாலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த பேட்ட படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் , கஸ்தூரி , சௌந்தர்யா ரஜினிகாந்த் , தனுஷ் , தயாநிதி அழகிரி போன்ற பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது ரஜினியின் பேட்ட படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் சுப்பிரமணியன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது , ரொம்ப அருமையான படம் தலைவா, பேட்ட படத்தை ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறார்கள். இந்த பொங்கலுக்கு இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்ததற்காக நன்றி என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூற, அதற்கு ரஜினி , ரொம்ப நன்றி சுப்பிரமணியன் , நீங்க சொன்னா மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் சொன்ன மாதிரி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சொல்லி கேட்பதற்கு நன்றி என கூறி அந்த ஆடியோவை முடித்திருந்தார் ரஜினி.