அடேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர்...! அஜித்துக்காக இப்படியெல்லாமா செய்வீங்க..!

சனி, 12 ஜனவரி 2019 (15:39 IST)
அஜித்-சிவா கூட்டணியில்  நான்காவது முறையாக இணைந்து பொங்கல் விருந்தாக சென்ற வியாழனன்று  வெளியான  படம் விஸ்வாசம்.



அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தில்  விவேக், தம்பிராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் என பலரும் நடித்து காமெடிக்கு பஞ்சம் வைக்காமல் படத்தை வெற்றியடைய வைத்துவிட்டனர். டி.இமான் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
விஸ்வாசம் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் அந்த கொண்டாட்டத்தின் ஒரு படி மேலே சென்ற  அஜித் ரசிகிர் ஒருவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காகவே வாயில் அலகு குத்தி தியேட்டர்  முன்பு ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்