விவசாயத்தின் பெருமையை பேசும் கிராமத்து கதையாக விஸ்வாசம் படம் இருக்காலம் என கருதுப்படுகிறது. தல அஜித் இதில் விவசாயியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அஜித், நயன்தாரா இருவருமே டிராக்டரில் உலுதுகொண்டு செல்லும் காட்சியும் வெளியாகி இருந்தது. கிராமத்து ஸ்டைலில் வேட்டை, சட்டை, தாடியுடன் காணப்பட்ட அஜித், கண்டாங்கி சேலை கட்டிய நயன்தாரா, இதையெல்லாம் விஸ்வாசம் படம் விவசாய படமாக இருக்கும் என்பதற்கான குறியீடாக பார்க்கப்படுகிறது.