தளபதிக்கு கை மாறிய தல நடிக்க விரும்பிய படம்!!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (11:59 IST)
தமிழ் சினிமாவின் அஜித், விஜய் இருவரும் அதிக அளவிளான ரசிகர்கள் கொண்ட நடிகர்கள். இருவரும் போட்டி போட்டு படங்களில் நடித்து வருகிறார்கள்.


 
 
இநிந்லையில், நடிகர் அஜீத் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து மெகா ஹிட்டான ஒக்கடு படத்தை தமிழில் நடிக்கலாம் என்று ஆசைபட்டார். 
 
ஆனால் அதற்குள் அதன் உரிமத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிவிட்டார். படத்தின் உரிமத்தை வாங்கும் போதே இதில் விஜய் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
 
அதன் பின்பு இயக்குநர் தரணி மூலம் விஜய்க்கு கதை சொல்ல விஜய்யும் ஓகே சொல்லி படத்தை நடித்து கொடுத்தார். தமிழில் ஜோதிகா அல்லது சிம்ரனை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து கடைசியில் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
நடிகர் விஜய்க்கு பெரும் திருப்பு முனையாக அமைந்த படம் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்