அஜித் டுவிட்டருக்கு வரவேண்டும்: அழைப்பு விடுத்த டுவிட்டர் நிர்வாகம்!

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (17:47 IST)
அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்றும் டுவிட்டரில் அவர் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் டுவிட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தல அஜித் அவர்கள் தான் நடிக்கும் திரைப்படங்களில் பூஜை, புரமோஷன் உள்பட எந்த விழாவுக்கும் வரமாட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்பட எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும், ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது விழாக்களில் பேசும் பழக்கம் அவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டுவிட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’அஜித் குறித்த செய்திகள் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் டுவிட்டரில் அடிக்கடி வருகிறது. எனவே அவர் டுவிட்டரில் கணக்கு தொடங்க வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார் 
 
இந்த அழைப்பை ஏற்று விரைவில் அஜித் டுவிட்டரில் கணக்கு தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் டுவிட்டரில் கணக்கு தொடங்கினால் அந்த டுவிட்டர் கணக்கு ட்விட்டர் இணையதளத்தை ஸ்தம்பிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்