விவேகம் படத்தின் டீசர் நள்ளிரவு வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் கதை கரு இணையத்தில் உலாவர தொடங்கியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான மிஷன் கதையாக விவேகம் கதை இருக்கும் என இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
RAW ஏஜெண்ட் மூலம் இந்திய அரசுக்கு தீவிரவாரிகளால் பேராபத்து வரப்போகிறது என்கிற தகவல் கசிகிறது. இதனை தொடர்ந்து சில தொடர் தீவிரவாத தாக்குதல்களும் அரங்கேறுகிறது.
RAW தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு ரகசிய குழு அமைக்கப்படுகிறது. அதன் தலைவர் தான் அஜித். பழைய அடையளங்கள் அழிக்கப்பட்டு புது அடையாளங்கலுடன் துருக்கி பார்டரில் இருக்கும் பல்கேரியா சென்று தீவிரவாதிகளை அழிப்பதே அந்த மிஷன்.
இந்த மிஷனில் அஜித் சந்திக்கும் இன்னல்கள், சவால்கள், கதாநாயகி காஜல், வில்லன் வீவேக் ஓப்ராய் பங்களிப்பு, மிஷன் வெற்றி அடைந்ததா ஆகியவை சேர்க்கப்பட்டு கதை அமைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் படத்தில் அக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என தெரிகிறது. விவேகம் படம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.