அஜித் விக்னேஷ் சிவன் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:15 IST)
அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இன்னும் பூஜை கூட போடப்படாத நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் துணிவு படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்